உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வார விடுமுறைக்கான செலவில்லா கொண்டாட்ட திட்டம்

வார விடுமுறைக்கான செலவில்லா கொண்டாட்ட திட்டம்

சனி, ஞாயிறு என்றாலே விடுமுறை மனநிலையில் பலரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி விடுகின்றனர். பரபரப்பான வாழ்க்கை சூழலில், வார இறுதி இளைப்பாறுதல் அவசியம் என்றாலும், இந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளக்கூடிய உணவு மற்றும் பொழுதுபோக்கு செலவு பட்ஜெட்டை பதம் பார்க்கலாம். அதிலும், சமூக ஊடகங்களில் மற்றவர்கள் வார கொண்டாட்டங்களை பார்க்கும் போது, நமக்கும் செலவு செய்யத்தோன்றும். இதற்கு மாறாக, மாதத்தில் ஒரு முறை அல்லதுசிலமுறை செலவில்லா திட்டத்தை பின்பற்றுவது கைகொடுக்கும்.

செலவில்லா மனநிலை:

செலவில்லா கொண்டாட்டம் என்பது மனநிலை சார்ந்தது. ஒரு முறை தானே என ரெஸ்டாரன்ட் செல்வது அல்லது உணவு டெலிவரியில் ஆர்டர் செய்வது செலவை அதிகமாக்கும். எனவே, செலவு செய்யாமலே கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என நினைப்பது மிகவும் முக்கியம்.

கட்டுப்பாடு:

செலவில்லா வார விடுமுறை என தீர்மானித்தவுடன், அந்த இரண்டு நாட்களில் எந்த செலவும் செய்வதில்லை என கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உணவு டெலிவரி சேவைகளை தவிர்ப்பதோடு, ஓடிடி சேவைகளை பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டும். வேறு செலவு செய்யும் பழக்கம் இருந்தால், அதையும் குறைக்க வேண்டும்.

அணுகுமுறை மாற்றம்:

சனிக்கிழமை காலையில் எழுந்ததும் அன்றைய தினத்தை எப்படி செலவிடலாம் என பரபரப்பாக திட்டமிடுவதற்கு மாறாக, முழு நாளையும் அமைதியான மனநிலையில் அணுக வேண்டும். வீட்டை சுத்தம் செய்வது அல்லது, குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவது போன்றவற்றை முயற்சிக்கலாம்.

புத்தகம் வாசிப்பு:

உணவை பொருத்தவரை கைவசம் உள்ள பொருட்களை கொண்டு, சுவையாக சமைக்க முயற்சிக்கலாம். ஏதேனும் புத்தகத்தை எடுத்து வாசித்து பார்க்கலாம். மனதுக்கு பிடித்த இசை கேட்கலாம். தோட்டத்தில் உலா வரலாம். மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க பல வழிகள் இருப்பதை உணரலாம்.

புதிய திட்டங்கள்:

இணைய யுகத்தில் பல்வேறு பயனுள்ள பொழுதுபோக்குகள் உள்ளன. நாட்குறிப்பு எழுதுவது அல்லது வலைப்பதிவு எழுதுவதை முயற்சிக்கலாம். புதிய திறன் ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம். பரபரப்பு இல்லாமல் வார விடுமுறையை கழிப்பதோடு, மிச்சம் செய்த தொகையை சேமிப்பாக மாற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை