உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / நான்காம் கட்ட தங்க பத்திரங்கள் விலையை அறிவித்தது ஆர்.பி.ஐ.,

நான்காம் கட்ட தங்க பத்திரங்கள் விலையை அறிவித்தது ஆர்.பி.ஐ.,

புதுடில்லி:ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நான்காம் கட்ட தங்கப் பத்திரங்களில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 6,263 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நான்காம் கட்ட தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. இதில் தங்கப் பத்திரத்தின் விலையாக, கடந்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களின் 24 காரட் தங்கத்தின் சராசரி விலையான 6,263 ரூபாயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் வாயிலாக வாங்கும்பட்சத்தில் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு 6,213 ரூபாய்க்கு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. தங்கப் பத்திரங்களை, மத்திய அரசின் சார்பில், ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம்.ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வாயிலாக இந்த தங்கப் பத்திரங்களில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.அதிகபட்சமாக ஒரு தனிநபர், ஆண்டு ஒன்றுக்கு நான்கு கிலோ வரையிலும், அறக்கட்டளைகள் போன்ற அமைப்புகள் 20 கிலோ வரையிலும் முதலீடு செய்யலாம்.தங்கப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுகள். எனினும், ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு, முதிர்வுக்கு முன்னதாக, முதலீட்டை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி