மேலும் செய்திகள்
சூழலை பொறுத்து வட்டி குறைப்பு
17-Jul-2025
பணவீக்கத்தை எதிர்கொள்ள உதவும் முதலீடு வழிகள்
04-Aug-2025
புதுடில்லி; நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில், எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.55 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சக தரவு தெரிவிக்கிறது. கடந்த 2017 ஜூன் மாதத்துக்கு பின், இதுவே குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும். அப்போது பணவீக்கம் 1.46 சதவீதமாக இருந்தது. சாதகமான அடிப்படை விளைவு மற்றும் உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே, கடந்த மாதம் பணவீக்கம் குறைய முக்கிய காரணம். முந்தைய ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையிலேயே பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. கடந்தாண்டு ஜூலையில் பணவீக்கம் சற்று அதிகமாக இருந்ததால், நடப்பாண்டு ஜூலை மாத பணவீக்க மதிப்பீட்டுக்கு சாதகமான அடிப்படை விளைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் காய்கறிகள், தானியங்கள், முட்டை, பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை மேலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 2.10 சதவீதமாகவும், கடந்தாண்டு ஜூலையில் 3.60 சதவீதமாகவும் இருந்தது.
17-Jul-2025
04-Aug-2025