/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு ரூ.1.01 லட்சம் கோடி விடுவிப்பு தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி
மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு ரூ.1.01 லட்சம் கோடி விடுவிப்பு தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி
புதுடில்லி :மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 1.01 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்துக்கு 18,227 கோடி ரூபாயும் குறைந்தபட்சமாக, கோவாவுக்கு 392 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 4,144 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. வரிப்பகிர்வு எவ்வளவு? மாநிலம் தொகை (ரூ. கோடியில்) உத்தர பிரதேசம் 18,227 பீஹார் 10,219 மத்திய பிரதேசம் 7,976 மேற்குவங்கம் 7,644 மஹாராஷ்டிரா 6,418 ராஜஸ்தான் 6,123 ஒடிஷா 4,601 தமிழகம் 4,144 ஆந்திரா 4,112 கர்நாடகா 3,706