மேலும் செய்திகள்
வங்கி கடன் 11% வளர்ச்சி ரிசர்வ் வங்கி தகவல்
20-Oct-2025 | 2
இந்திய வங்கிகளை குறிவைக்கும் சர்வதேச நிறுவனங்கள்
20-Oct-2025 | 1
வங்கி கடன் 11% வளர்ச்சி ரிசர்வ் வங்கி தகவல்
20-Oct-2025
கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக விளங்கும் கிரெடிட் ஸ்கோர் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும் போது, கிரெடிட் ஸ்கோர் முக்கிய அங்கம் வகிப்பதால் பொதுவாக வலுவான கிரெடிட் ஸ்கோர் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான பொதுவான செயல்பாடுகளும் பரவலாக வலியுறுத்தப்படுகின்றன. கிரெடிட் ஸ்கோரைதீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு அம்சங்களில் ஒன்றானகடன் கலவை பற்றி இங்கு பார்க்கலாம்.கடன் கலவை:
வீட்டுக்கடன், வாகன கடன், கல்விக்கடன் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என பல வகை கடன்கள் இருக்கின்றன அல்லவா? இப்படி ஒருவரது கடன் அறிக்கையில் பல வகை கடன் இடம்பெற்றிருப்பதே கடன் கலவை என கொள்ளப்படுகிறது. ஆங்கிலத்தில் இது கிரெடிட் மிக்ஸ் என குறிப்பிடப்படுகிறது.கடன் தாக்கம்:
பொதுவாக பல வகை கடன்களை பெற்றிருப்பது கடன் தகுதி மதிப்பில் நல்லவிதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், பல்வேறு கடன்களை நிர்வகிப்பது, பலவிதமான கடன்களை கையாளும் ஆற்றலாக கருதப்படுகிறது. இது கடன் மதிப்பீட்டில் தாக்கம் செலுத்தலாம்.புதிய கடன்:
பல வகை கடன் பெற்றிருப்பது கடன் மதிப்பீட்டில் தாக்கம் செலுத்தினாலும், கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக்கொள்வதற்காக புதிய கடன் பெறுவது ஏற்றது அல்ல. ஏனெனில், புதிய கடன் கோரிக்கை கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையாக தாக்கம் செலுத்தலாம். காலப்போக்கில் இத்தகைய கடன்களை அமைவதே ஏற்றது.கடன் நிர்வாகம்:
கடன் கலவை கிரெடிட் ஸ்கோரில் ஒரு அங்கமாக அமைந்தாலும், கடன் தவணையை முறையாக திரும்பி செலுத்துவது, கடன் பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களே முக்கியமாக கொள்ளப்படுகின்றன. மேலும், கடன் கலவை அம்சம், தனிநபர்கள் சூழல் மற்றும் கடன் அமைப்பு பின்பற்றும் மாதிரிக்கு ஏற்ப அமையலாம்.கடன் அடிப்படை:
கிரெடிட் ஸ்கோரை தீர்மானிப்பதில் பல்வேறு அம்சங்கள் பங்கு வகிப்பதை அறிந்திருப்பது அவசியம். அந்த வகையில் கடன் கலவை பற்றி அறிந்திருப்பது நல்லது. எனினும், தேவைக்கேற்ப கடன் வாங்குவதும், வாங்கிய கடனை முறையாக திரும்பி செலுத்துவதுமே ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோர் அளிக்கும்.
20-Oct-2025 | 2
20-Oct-2025 | 1
20-Oct-2025