வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வரவுக்குள் செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பணக்காரர்கள் வாங்கிய கடன் எவ்வளவு திரும்ப கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான கட்டுரை ஒன்று வெளியிடுங்கள்
விடுவோமா நாங்க..
சிறு கடன் பிரிவில், தவணையை செலுத்த தவறுதல் அதிகரிப்பது தொடர்பான அண்மை தரவுகள், கடன் நிர்வாகத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக கடன் வசதி பெறுவது அதிகரித்திருக்கும் சூழலில், இளம் தலைமுறையினர் கடன் பழக்கம் தொடர்பான அண்மை தரவுகள் கவலை தருவதாக அமைந்துள்ளது. சிறு கடன் பிரிவில் இளம் வயதினர் தவணையை தவற விடுவது அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, தனிநபர் கடனில் 50 ஆயிரத்துக்கும் குறைவான தொகை பிரிவில் இந்த போக்கு அதிகரித்துள்ளது. இந்த பிரிவில் நான்கில் ஒரு கடன் குறித்த காலத்தில் திரும்ப செலுத்தப்படவில்லை என கிரெடிட் ரேட்டிங் நிறுவனம் சி.ஆர்.ஐ.எப்., மற்றும் இந்திய டிஜிட்டல் கடன் சேவையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. கடன் தேவை
பத்தாயிரத்துக்கும் குறைவான பிரிவில் தவணை செலுத்த தவறுவது அதிகமாக இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. சிறு கடன்களை திரும்ப செலுத்த தவறுவது கடந்த 2019ம் ஆண்டு 14 சதவீத அளவில் இருந்தது, 2023ல் 26 சதவீத அளவு அதிகரித்துஉள்ளது. ஒரு லட்சம் கடன் அளவில் கூட வாரா கடன் விகிதம் அதிகரித்துள்ளது. இந்த போக்கு குறித்து கவனம் தேவை என வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த வகை கடன்கள் பெரும்பாலும் வங்கிசாரா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுபவை. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் வங்கிச்சேவைக்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளன. டிஜிட்டல் செயலிகள் வாயிலாக இந்த கடன்கள் எளிதாக கிடைக்கின்றன.இதனிடையே ரிசர்வ் வங்கி அறிக்கையும், 2024 ம் ஆண்டின் முதல் பாதியில் நுண்கடன் பிரிவில் தவணையை செலுத்துவது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கடன் பெற்றவர்கள் அதிக நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இளம் தலைமுறையினர் மத்தியில் கடன் வசதியை நாடுவது அதிகரித்திருப்பது மற்றும் தவணையை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதற்கு கடன் பழக்கம் தொடர்பான போக்கு, பொருளாதார நெருக்கடி, நிதிக்கல்வி விழிப்புணர்வின்மை உள்ளிட்டவை காரணங்களாக அமைவதாக கருதப்படுகின்றன. கடன் நிர்வாகம்
இளம் வயதினர் வாழ்வியல் சார்ந்த செலவுகளை அதிகம் மேற்கொள்வது கடன் வசதியை அதிகம் நாட வைப்பதாக அமைகிறது. சமூக ஊடக தாக்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் செயலிகள் மூலம் கடன் வசதி, முன்னதாக வாங்கி கொண்டு பின்னர் பணம் செலுத்தும் வசதி ஆகியவையும் இதற்கு காரணமாகின்றன. மேலும், சிறு கடன் பெறுபவர்களில் பலரும், டெலிவரி சேவை போன்ற பிரிவுகளில் பணியாற்றுபவர்களாக இருப்பதால், சீரற்ற வருமானம் கடன் சிக்கலை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.இந்த சூழலில் கடன் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். தேவைக்கேற்ப கடன் பெறுவது மற்றும் கடன் பெறும் போது திரும்பி செலுத்தும் திறனை கவனத்தில் கொள்வது அவசியம் என்கின்றனர். நிதிக்கல்வி தொடர்பான விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும். கடன் சேவை நிர்வாகம் தொடர்பான கட்டுப்பாட்டு நெறிமுறைகளும் அவசியம் என்கின்றனர். மேலும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, அவசர கால நிதியின் அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
வரவுக்குள் செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பணக்காரர்கள் வாங்கிய கடன் எவ்வளவு திரும்ப கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான கட்டுரை ஒன்று வெளியிடுங்கள்
விடுவோமா நாங்க..