உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பொதுத்துறை வங்கிகள் அதிக கிளைகள் திறக்க வேண்டும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

பொதுத்துறை வங்கிகள் அதிக கிளைகள் திறக்க வேண்டும்; மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடில்லி: தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகளின் போட்டியைச் சமாளிக்கும் வகையில், கூடுதலாக வங்கிக் கிளைகளை திறக்குமாறு, பொதுத் துறை வங்கிகளை, மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, நிதி அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள் செயல்படும் பகுதிகளில் புதிய கிளைகளைத் திறக்குமாறு பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மாறி வரும் வங்கிச் சேவை சூழலுக்கு ஏற்ப, சவால்களை சமாளிக்கும் வகையில், புதிய வங்கிக் கிளைகள் திறப்பது அவசியமாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, வங்கிகளின் வாராக்கடன், பல பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அளவாக, 2024 ஆண்டின் 2.60 சதவீதத்தில் இருந்து கடந்த மார்ச்சில் 2.30 சதவீதமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.https://x.com/dinamalarweb/status/1939929053412179973

துணை நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு

பொதுத் துறை வங்கிகள், தங்கள் துணை நிறுவனங்களை பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டு, நிதி திரட்டச் செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.பொதுத் துறை வங்கிகள், வீட்டு வசதி, காப்பீடு உள்ளிட்ட மற்ற துறைகளின் வர்த்தகத்துக்கென, துணை நிறுவனங்களை கொண்டுள்ளன. அவற்றில் வங்கிகள் முதலீடு செய்திருப்பதுடன், துணை நிறுவனங்களில் கூடுதல் முதலீடுகளை அவ்வப்போது செய்கின்றன. துணை நிறுவனங்களை பங்குச் சந்தைகளில் பட்டியலிடச் செய்வதன் மூலம், தற்போது சந்தைகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்து, தங்கள் முதலீட்டுக்கு கூடுதல் லாபம் ஈட்ட, பொதுத் துறை வங்கிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜூலை 01, 2025 10:26

இருக்கிற வங்கிகளை நல்லா சேவை குடுக்கும்படி செஞ்சாலே போதும். ஆனா, புதுக் கிளை திறந்தாத்தானே எல்லோரும் ஆட்டையப் போடலாம்.


சமீபத்திய செய்தி