வர்த்தக பற்றாக்குறை அக்டோபரில் உயர்வு
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் 3.66 லட்சம் கோடி ரூபாயாக கணிசமாக அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கால தேவை அதிகரிப்பால், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது. இறக்குமதி ஒருபுறமிருக்க, மொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது. சரக்கு வர்த்தக பற்றாக்குறை கடந்த செப்டம்பரில் 2.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.