உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆப்பிள் உதிரி பாகங்கள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி

ஆப்பிள் உதிரி பாகங்கள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி

புதுடில்லி : ஆப்பிள் தயாரிப்புகளுக்கு தேவையான உதிரி பாகங்களை, சீனா,வியட்நாம் நாடுகளுக்கு முதன் முதலாக இந்தியா ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. மேக்புக்ஸ், ஏர்பாட்ஸ், வாட்ச், பென்சில் மற்றும் ஐபோன்கள் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு களுக்கு தேவையான உதிரி பாகங்களை, முதன்முறையாக சீனா மற்றும் வியட்நாமுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய துவங்கிஉள்ளது. ஆப்பிள் நிறுவனம், கடந்த 2024ம் ஆண்டில், இந்தியாவில், இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஐபோன்களை ஏற்றுமதி செய்ததை தொடர்ந்து, உதிரி பாகங்கள் துறையிலும் விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் தற்போது, இந்தியாவில் ஐபோன்களை மட்டுமே தயாரிக்கிறது. விரைவில் ஏர்பட்சுகளின் தயாரிப்பையும் துவங்க உள்ளது. தற்போது, பிற தயாரிப்புகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரித்து, சீனா மற்றும் வியட்நாமுக்கு அனுப்ப துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ