உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரிட்டானியா சி.இ.ஓ., ராஜ்நீத் ராஜினாமா

பிரிட்டானியா சி.இ.ஓ., ராஜ்நீத் ராஜினாமா

புதுடில்லி:பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜ்நீத் சிங் கோலி அறிவித்து உள்ளார்.முன்னதாக டாமினோஸ் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், கோககோலா நிறுவனங்களில் பணியாற்றிய ராஜ்நீத் சிங், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில், பிரிட்டானியா நிறுவனத்தில் செயல் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சேர்ந்தார். இதற்கிடையே, நிறுவனத்துக்கு வெளியே வேறு வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள இருப்பதால், நிறுவனத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கடிதம் அளித்து உள்ளார்.ராஜினாமா கடிதத்தை ஏற்ற பிரிட்டானியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வெளியிட்ட சுற்றறிக்கையில், 'மார்ச் 14ம் தேதியுடன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜ்நீத் சிங் கோலி விலகுவார்' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி