சீன குடைகள், இசை கருவிகள் இறக்குமதியால் வணிகம் பாதிப்பு
புதுடில்லி:சீனாவிலிருந்து அதிகளவில் குடைகள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, 'குளோபல் டிரேடு ரிசர்ச் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: சீனாவில் இருந்து அதிகளவில் குடைகள், பொம்மைகள், சிலவகை துணிகள் மற்றும் இசைக்கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், இந்தியாவின் உள்நாட்டு சிறு, குறு, நடுத்தர தொழில்துறை கடுமையாக பாதிப்படைகிறது.பற்றாக்குறைநடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், 70,550 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.அதேநேரத்தில், இறக்குமதி 4.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதன் விளைவாக 3.48 லட்சம் கோடி ரூபாய் அளவில் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் தொழில்துறை பொருட்கள் இறக்குமதியில், 29.80 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது. முக்கியமான தொழில்துறை பொருட்களின் இறக்குமதிக்கு சீனாவை அதிகம் சார்ந்திருப்பதை குறைக்க, இந்தியாவின் உற்பத்தி துறை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.சீனாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள், உள்நாட்டு தொழில் நிறுவனங்களாலும் தயாரிக்கப்படுகின்றன.மலிவான விலையுடைய சீன இறக்குமதி பொருட்களுடன் உள்நாட்டு தொழில்நிறுவனங்கள் போட்டியிடுவது கடினமாக இருப்பதால், அவை அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றன.வாழ்வாதாரம் சிதைப்புஇக்காரணங்களினால், உள்நாட்டு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை குறைப்பது அல்லது நிறுவனங்களை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன. இதனால் வேலையின்மை அதிகரிப்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.சீன இறக்குமதி மீதான அதீத நம்பிக்கை, இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறது. சிறு வணிகங்களை பாதுகாக்கவும், இந்திய பொருளாதார சுதந்திரத்தை பராமரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.