சீன முதலீடுகள் ஆராயப்படுவது அவசியமே
பொதுவாகவே, உலக நாடுகளுக்கு சீனாவுடனான உறவில் ஏதோ ஒரு பிரச்னை இருந்து கொண்டே தான் வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, அது பிரத்யேக கவனம் ஈர்க்கும் பிரச்னையாக உள்ளது. எல்லை பிரச்னை மட்டுமல்லாமல்; பொதுவாகவே நமக்கு சீனாவுடனான உறவில் பிரச்னை இருப்பதால், நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும். சீன நிறுவனங்கள் இங்கு முதலீடோ, வணிகமோ செய்யக்கூடாது என்பது அரசின் எண்ணம் கிடையாது. அதே நேரத்தில், தற்போதைய இரு தரப்பு உறவுகளை கருத்தில்கொள்ளும் போது, சீனாவிலிருந்து வரும் முதலீடுகள் ஆராயப்படுவது அவசியமானதே.-- எஸ்.ஜெய்சங்கர்அமைச்சர்,மத்திய வெளியுறவுத்துறை