மேலும் செய்திகள்
83 பயணியருடன் இலங்கை சென்றது 'சிவகங்கை' கப்பல்
23-Feb-2025
சென்னை:உலகின் முன்னணி கப்பல் தயாரிப்பாளரான 'ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிய கட்டுமான தளத்தை அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, தமிழகத்தின் சென்னை மற்றும் துாத்துக்குடியில் கப்பல் கட்டுமான தளம் அமைப்பதற்காக, ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி; ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிராவிலும் ஆய்வு மேற்கொண்டுஉள்ளனர். அத்துடன், எல் அண்டு டி., நிறுவனத்துடன் கூட்டணி சேரவும் முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.இந்தியாவின் கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு, அண்மையில் கொரியா சென்றது. இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் நவீன கட்டுமான தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.உலகளவில் கப்பல் கட்டுமானத் துறையில், இந்தியா ஒரு சதவீத பங்கை மட்டுமே வைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், முதல் 10 இடங்களுக்குள் முன்னேறவும், 2047ல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
23-Feb-2025