பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு நான்காவது இடம்
புதுடில்லி:உலகளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை கொண்ட நாடுகளில், 85,698 பேருடன், இந்தியா நான்காவது இடம் பிடித்து உள்ளதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் பிராங்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பிரிவில் இடம்பெறுவோர் வசம் உடனடியாக பணமாக்கக்கூடிய வகையில், ஒரு மில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் 8.60 கோடி ரூபாய் இருக்க வேண்டும். மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அதிக பணக்காரர்களை உருவாக்குவதில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. உலகளவிலான மொத்த பணக்காரர்களில், அமெரிக்காவில் 40 சதவீதம் பேரும்; சீனாவில் 20 சதவீதம் பேரும்; ஜப்பானில் 5 சதவீதம் பேரும் உள்ளனர். இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்கள் காரணமாக, பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, 7 பணக்காரர்கள் மட்டுமே உருவான நிலையில், கடந்தாண்டு புதிதாக 26 பணக்காரர்கள் உருவாகி உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.