உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில்புரிவோர் மன உளைச்சலை குறைக்க தொழில் பூங்காக்களில் விளையாட்டு மைதானம்

தொழில்புரிவோர் மன உளைச்சலை குறைக்க தொழில் பூங்காக்களில் விளையாட்டு மைதானம்

சென்னை:காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதுார் உட்பட மூன்று தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பயன்பெற, விளையாட்டு மைதானங்களை அமைக்க, 'சிப்காட்' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், வேலைக்காக சொந்த ஊரை விட்டு வந்து, ஆலைகளுக்கு அருகில் தங்கியுள்ளனர். அவர்கள், மன உளைச்சல், தீய பழக்கங்களுக்கு ஆளாகமல் இருக்கவும், உடல் மற்றும் மன ரீதியாக பலம் பெறவும், தொழில் பூங்காக்களில் விளையாட்டு மைதானங்களை அமைக்க, சிப்காட் முடிவு செய்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் தொழில் பூங்காவில், 1.25 கோடி ரூபாயில் கைப்பந்து மற்றும் பூப்பந்து மைதானம் அமைக்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய தற்போது, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது. துாத்துக்குடி தொழில் பூங்காவில், 1.53 கோடி ரூபாயில், கைப்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொழில் பூங்காவில், 2.27 கோடி ரூபாயில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. இவற்றுக்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களை பூங்காக்களில் செயல்படும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, பராமரிக்கும்.

சிப்காட்தொழில் பூங்காக்கள் 40செயல்படும் ஆலைகள் 3,275பணிபுரிவோர் 8,00,000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை