மேலும் செய்திகள்
7 குளிர்பான கம்பெனிகளுக்கு அதிகாரிகள் 'சீல்'
28-Nov-2024
சென்னை:'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சார்பில், 'சவ்மெக்ஸ் 2024' என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 27, 28, 29ல் நடைபெற உள்ளது. இதில், 15,000க்கும் மேற்ட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பதுடன், 375க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இந்த கண்காட்சியில் பங்கேற்று, தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்குமாறு, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசின் பேம்.டி.என்., கடிதம் எழுதியுள்ளது.மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கொச்சின் ஷிப்யார்டு, இந்திய விண்வெளி ஆய்வு மையம், தேசிய அனல்மின் கழகம், பி.இ.எம்.எல்., மற்றும் ராணுவ துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகளவில் பொருட்களை வாங்குகின்றன. எனவே, மேற்கண்ட நிறுவனங்களின் உயரதிகாரிகளை தமிழக அதிகாரிகள் நேரில் சந்தித்து, சென்னையில் நடக்கும் கண்காட்சியில் அந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கட்டாயம் பங்கேற்பதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, சிறு தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
28-Nov-2024