எண்கள் சொல்லும் செய்தி
1,500 கோடி ரூபாயில் மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், பதஞ்சலியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு மற்றும் மூலிகை பூங்கா நாளை திறக்கப்பட உள்ளது. இப்பூங்கா நாௌான்றுக்கு 800 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தும் திறன் கொண்டது என பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. 41 சதவீத அளவுக்கு, இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை, கடந்த பிப்ரவரியில் வளர்ச்சி கண்டுள்ளதாக வேலைவாய்ப்பு தளமான பவுண்டுஇட் தெரிவித்துள்ளது. புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. 30,00,000 டன் கோதுமையை நடப்பு நிதியாண்டில் வெளி சந்தையில் மத்திய அரசு விற்பனை செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தொழில்துறை மதிப்பீட்டின்படி, வருகிற ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, கோதுமை கையிருப்பு 10 முதல் 11 லட்சம் டன் என்ற அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்றும், இது வழக்கத்தைவிட சற்று அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.