உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை ஜெர்மனி கூட்டமைப்புடன் ஒப்பந்தம்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை ஜெர்மனி கூட்டமைப்புடன் ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய, திருமுடிவாக்கம், 'சிட்கோ' தொழிற்பேட்டை, ஜெர்மனி - இந்திய வணிகக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில், 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு தொழிற்பேட்டை உள்ளது. அங்கு, 450 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பை, ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்கின்றன. கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களும், வாகன உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. தமிழகத்தில் உள்ள சிறு நிறுவனங்களின் தங்களின் தயாரிப்பை, ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க, திருமுடிவாக்கம், கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், அந்நாட்டில் உள்ள ஜெர்மனி இந்திய வணிகக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துஉள்ளனர்.இந்த ஒப்பந்தம், ஜெர்மனியில் உள்ள முனிக் நகரில், இந்திய துாதர அதிகாரி சத்ருக்ன சின்ஹா முன்னிலையில், நேற்று கையெழுத்தாகியுள்ளது.இதுகுறித்து, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் செல்வம் கூறியதாவது:ஜெர்மனியின் முனிக் நகரில், 55,000 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல துறைகளில் ஈடுபட்டுள்ளன. இந்திய தொழில் நிறுவனங்கள், ஜெர்மனியில் நேரடியாக தொழிலில் ஈடுபட முடியாது. அந்நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்துதான், அதை மேற்கொள்ள முடியும்.இதற்காக, 'ஜிபா' எனப்படும் ஜெர்மனி இந்திய வணிகக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், ஜெர்மனியில் வணிகத்தில் ஈடுபட முடியும். தற்போது இருப்பதைவிட, அதிக நிறுவனங்கள் ஜெர்மனிக்கு தங்களின் தயாரிப்பை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதிக நிறுவனங்கள் ஜெர்மனிக்கு தங்களின் தயாரிப்பை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை