உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மருத்துவ காப்பீடு பிரிமியம் தொகையை குறைக்கும் வழிமுறைகள்!

மருத்துவ காப்பீடு பிரிமியம் தொகையை குறைக்கும் வழிமுறைகள்!

நிதி பாதுகாப்பை உறுதி செய்வதில் மருத்துவ காப்பீடும் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ காப்பீடு என்று வரும் போது, இளம் வயதினருக்கும் முக்கியம், வயதானவர்களுக்கும் முக்கியம். மேலும், வயதான காலத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், போதிய மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். இந்தியாவில் பலரும் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறாமல் இருக்கும் நிலையில், மருத்துவ செலவுகளை சமாளிப்பது சவாலாகலாம். வயதுக்கு ஏற்ப பாலிசி பிரிமியம் தொகையும் அதிகரிப்பது கூடுதல் சிக்கலைஏற்படுத்தலாம். காப்பீடு பிரிமியம் தொகையை குறைப்பதற்கான வழிகள் சில:

ஆரம்ப காப்பீடு:

மருத்துவ காப்பீடு பாலிசியை ஆரம்ப கட்டத்திலேயே எடுத்திருந்து, தொடர்ந்து பராமரித்து வருவது சிறந்த வழி. 60 வயதில் பாலிசி எடுப்பதை விட, 30 அல்லது 40 களில் பாலிசி எடுக்கும் போது பிரிமியம் குறைவாக இருக்கும். பாலிசியை தொடர்வதன் மூலம் போனஸ் போன்ற பலன்களையும் பெறலாம்.

கூடுதல் பலன்:

மேலும் நீண்ட கால வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் அளிக்கும் பலனையும் பெறலாம். அதே போல, பிரிமியம் தொகையை ஆண்டு அடிப்படையில் செலுத்துவது அல்லது, மூன்றாண்டு பாலிசி எடுப்பது போன்றவை மூலம் பிரிமியம் தொகையை குறைக்கலாம்.

குடும்ப திட்டம்:

வயதானவர்கள் குடும்பத்திற்கான பிளோட்டர் பாலிசியையும் பரிசீலக்கலாம். ஒரு பாலிசி கீழ், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதால், நீதி பொறுப்பை இளையவர்களுடன் பகிர்ந்து கொண்டு காப்பீடு பாதுகாப்பும் பெறலாம். இந்த பாலிசிகளுக்கு சலுகைகளும் அளிக்கப்படுகிறது.

இதர அம்சங்கள்:

வயதானவர்கள், அதிக பிடித்த தொகையை முன்னதாக செலுத்துவதன் மூலம் பிரிமியமை குறைக்கலாம். காப்பீடு துவங்குவதற்கு முன் செலுத்தப்படும் குறிப்பிட்ட நிலையான தொகை பிடித்தமாக கருதப்படுகிறது. இதே போல மருத்துவ செலவின் ஒரு பகுதியை இணைந்து செலுத்தும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம்.

பரிசோதனை சலுகைகள்:

வரும் முன் காப்போம் வகையிலான மருத்துவ சேவைகளை நாடலாம். ஆண்டு பரிசோதனை அல்லது உடல்நல தகுதி திட்டங்கள் மூலம் ஆரோக்கியத்தை உறுதி செய்வதோடு இதற்கான சலுகைகளையும் பெறலாம். அடிப்படை பாலிசி எடுத்துக்கொண்டு தேவையான டாப் அப்களையும் நாடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை