உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ‘100% எத்தனாலில் இயங்கும் கார் இந்த மாதம் அறிமுகமாகும்’

‘100% எத்தனாலில் இயங்கும் கார் இந்த மாதம் அறிமுகமாகும்’

புதுடில்லி: டொயோட்டா நிறுவனம் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கக்கூடிய இன்னோவா காரை, இந்த மாதம் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘முழுதும் எத்தனாலில் இயங்கக்கூடிய கார்களை உற்பத்தி செய்ய மோட்டார் வாகன சட்டத்தில் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, இ100 எனப்படும் முழு எத்தனாலில் இயங்கக்கூடிய கார் இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்காசிய போருக்கு பின், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. இதை சமாளிக்க, எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். அடுத்த ஆண்டில் விற்கவுள்ள கார்களில் 40 சதவீதம் வரை மின்சார கார்களாக இருக்கும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை