ரூ.130 கோடி முதலீடு திரட்டிய 22 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
சென்னை; தமிழக அரசின், 'டேன்பண்ட்' திட்டத்தின் வாயிலாக, 22 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 130 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளன.முதலீடு தேவைப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்க, டேன்பண்ட் எனப்படும் முதலீட்டாளர் இணைப்பு தளத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், 2024 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் துவக்கியது. இந்த தளத்தின் வாயிலாக இதுவரை, 1,019 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, முதலீட்டாளர்களுடன் இணைக்கும், 137 முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, 22 நிறுவனங்கள், 130 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளன.