உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் 2,300 பேர் பணி நிரந்தரம்

 என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் 2,300 பேர் பணி நிரந்தரம்

நெய்வேலி: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் 2,300 பேரின் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 11ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் என்.எல்.சி.,யின், 397 சொசைட்டி தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி காணொலி வாயிலாக தலைமை தாங்கினார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரூபிந்தர் ப்ரார் காணொலி வாயிலாக பங்கேற்றனர். அமைச்சர் கிஷன் ரெட்டி பேசுகையில், “என்.எல்.சி.,யில் 2015 முதல் தற்போது வரை 2,300 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். என்.எல்.சி., இந்தியா நிறுவனம் வரும் ஆண்டுகளில் புதிய மைல் கல்லை எட்டும்,” என்றார். புதிய ஒப்பந்தம் பசுமை எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த, என்.எல்.சி.ஐ.எல்., மற்றும் ஒடிசா நிறுவனமான ஒரேடா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் மற்றும் ஒடிசா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் ஆகியன, கடந்த 10ம் தேதி, ஒடிசாவின் பூரி நகரில் நடந்த உலகளாவிய எரிசக்தி தலைவர்கள் உச்சி மாநாடு 2025ல், ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறைப்படி பரிமாற்றி கொண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி