மாம்பழ குளிர்பானங்களில் 25% மாம்பழக்கூழ் கட்டாயம்
புதுடில்லி; மாம்பழக்கூழ் தயாரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தோத்தாபுரி மாம்பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசு காரணங்கள் குறித்து ஆராய ஐ.சி.ஏ.ஆர்., தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு தோத்தாபுரி மாம்பழத்தின் விலை குறைவு குறித்து ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் ஆய்வு செய்து அறிக்கையை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் அளித்தது. நிபுணர் குழு பரிந்துரையின்படி மாம்பழ பானங்களில் 22-25 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாம்பழக்கூழ் இருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.