உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.52,000 கோடி கார்கள் தேக்கம் டீலர்களிடம் நிற்கும் 4.40 லட்சம் கார்கள்

ரூ.52,000 கோடி கார்கள் தேக்கம் டீலர்களிடம் நிற்கும் 4.40 லட்சம் கார்கள்

புதுடில்லி:நாடு முழுதும் உள்ள பயணியர் கார் முகவர்கள், 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை இருப்பில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 4.4 லட்சம் கார்கள் டீலர்களிடம் இருப்பில் இருக்கின்றன.வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தகவலின்படி, பயணியர் கார் கையிருப்பு, 52 முதல் 63 நாட்களாக உள்ளது. இது சராசரியாக இருக்க வேண்டிய 21 நாட்களை விட மிக அதிகம். இதனால், பயணியர் கார் முகவர்கள் நிதி நெருக்கடியில் தள்ளப்படுகின்றனர்.வருமான வரி, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், நடப்பாண்டின் இரண்டாம் பாதியில், கார் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajan A
ஜூன் 14, 2025 15:58

தகர டப்பாக்கள் தேங்கி நிற்கிறது. மைலேஜ் ஆசை காட்டி டப்பா கார்களை விற்கிறார்கள்


Ben Sam
ஜூன் 15, 2025 10:09

அவைகள் கண்டெம் பண்ணப்பட்டாலும் விலையில் குறையாது. முதல் கிடைத்து இருக்கும்.


chennai sivakumar
ஜூன் 14, 2025 13:56

இது ஆரம்பம் மட்டுமே. விரைவில் மிக அதிக வசதி படைத்தவர்களை தவிர எல்லோரும் ஓலா உபர் போன்றவற்றைபுபுப்கிபீர்கள். மேலும் மெட்ரோ முழுமையாக வந்த பின்னர் இன்னமும் குறையும். தினம் ஒரு மாடல் வெளிவந்து பைத்தியம் பிடிக்காத குறை .


புதிய வீடியோ