உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 8 துறை வளர்ச்சி நவம்பரில் 4.30% ஆக சரிவு

8 துறை வளர்ச்சி நவம்பரில் 4.30% ஆக சரிவு

புதுடில்லி : முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி கடந்த நவம்பர் மாதத்தில் 4.30 சதவீதமாக குறைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 7.90 சதவீதமாக இருந்தது.எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும்.இதில் கடந்த நவம்பர் மாதத்தில் சிமென்ட் தவிர மற்ற அனைத்து துறைகளின் வளர்ச்சியுமே கடந்த 2023ம் ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் சரிவு கண்டன.கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு துறைகளின் வளர்ச்சி மைனஸ் நிலையில் இருந்தது. சிமென்ட் துறை உற்பத்தி 13 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 4.20 சதவீதமாக உள்ளது.இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 8.70 சதவீதமாக இருந்தது. இந்த எட்டு துறைகள், நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 40.27 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ