பங்குசந்தை ஒரு பார்வை
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதியில் ஏற்ற இறக்கமான வர்த்தகத்திற்கு பிறகு, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 193 புள்ளிகள் உயர்ந்து, 83,433 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில், நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து, 25,461 புள்ளியாக இருந்தது. வங்கித்துறை பங்குகள் ஏற்றம் கண்டன.அமெரிக்க வர்த்தக வரி தொடர்பான கெடு நெருங்கும் நிலையில், முதலீட்டாளர்கள் காத்திருந்து செயல்படும் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றினர். வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.