அதானி சிமென்ட் - கிரெடாய் கூட்டு
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், அதானி சிமென்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. மறுகாடு வளர்ப்பு மற்றும் நகர்ப்புற பசுமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான இரு முக்கிய முயற்சிகளை கிரெடாய் துவங்கியுள்ளது. பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் 9,000 ஏக்கரில், 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதன் வாயிலாக மறு காடு வளர்ப்பு திட்டம் துவங்கவுள்ளது. மேலும், அதானி சிமென்ட் நிறுவனத்துடனான கூட்டு வாயிலாக, கிரெடாய் நிறுவனத்தின் கட்டுமானத்துக்கு, அதானி சிமென்ட் பிரீமியம் ஜி.ஆர்.ஐ.எச்.ஏ., சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் பசுமை கான்கிரீட் தீர்வுகளை வழங்கும். அத்துடன், கிரெடாயில் பதிவு பெற்ற கட்டுமான நிறுவன ஊழியர்களுக்கு, ஆன் - சைட் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பயிற்சியை வழங்கும்.