உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கேதார்நாத் ரோப்வே திட்டம் அதானி குழுமம் வசமானது

கேதார்நாத் ரோப்வே திட்டம் அதானி குழுமம் வசமானது

புதுடில்லி:உத்தராகண்ட் மாநிலம், சோன்பிரயாக் மற்றும் கேதார்நாத் இடையே 13 கிலோமீட்டர் நீளமுள்ள ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. மொத்தம் 4,081 கோடி ரூபாய் செலவில் இந்த ரோப்வே அமைக்கப்பட உள்ளது. கேதார்நாத் சிவன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சாலை வழியாக அணுகக்கூடிய இறுதிப்புள்ளி சோன்பிரயாக் ஆகும். இங்கிருந்து கோவிலுக்கு செல்வதற்கு பாதுகாப்பான, விரைவான மற்றும் சுற்றுச்சுழலுக்கு உகந்த வழியில் பயணிப்பதை உறுதி செய்ய, ரோப்வே அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. தற்போது, சோன்பிரயாகில் இருந்து கேதார்நாத்துக்கு செல்ல 16 கிலோ மீட்டர் துாரம் மலையேற வேண்டியுள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் ஆகிறது. இல்லையென்றால், குதிரை சவாரி, பல்லக்குகள் அல்லது ஹெலிகாப்டர்கள் வழியாக செல்லலாம். இந்நிலையில், ரோப்வே செயல்பாட்டுக்கு வந்ததும், இந்த பயண நேரம் வெறும் 36 நிமிடங்களாக குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ