உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டென்மார்க் மாநாடு ஆடை வர்த்தகர்களுக்கு ஏ.இ.பி.சி., அழைப்பு

டென்மார்க் மாநாடு ஆடை வர்த்தகர்களுக்கு ஏ.இ.பி.சி., அழைப்பு

திருப்பூர்: டென்மார்க்கில், ஏ.இ.பி.சி., எனப்படும் மத்திய அரசின் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் வரும் ஜன., மாதம் நடைபெறவிருக்கும் வர்த்தக சந்திப்பில் பங்கேற்க, ஆடை வர்த்தகர்களுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறுகையில், “இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், டென்மார்க் தலைநகர், கோபன்ஹேகனில் 2027 ஜன., 28, 29 ஆகிய தேதிகளில் ஏ.இ.பி.சி., சார்பில் வர்த்தக சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. அரசு மானியத்துடன் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள், டிச. 31க்குள் முன்பதிவு செய்யலாம். இம்மாநாடு வாயிலாக இந்திய நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும்,” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி