புதிய தாஜ் ஹோட்டல் கட்ட ஒப்பந்தம்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து, புதிய தாஜ் ஹோட்டல் கட்டுவதற்கு, இந்தியன் ஹோட்டல் கம்பெனி ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. புதிய ஹோட்டலானது, 12 ஏக்கரில், 151 அறைகள் கொண்டதாகவும், 10,000 மற்றும் 5,300 சதுரடி பரப்பளவில் கூட்ட அரங்குகள், இரண்டு உணவகங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனுடன் சேர்த்து, சென்னையில் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனிக்கு சொந்தமான ஹோட்டல்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதில், ஆறு ஹோட்டல்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.