உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தரவு அடிப்படையில் கப்பல் இன்ஜின் பராமரிப்பு

தரவு அடிப்படையில் கப்பல் இன்ஜின் பராமரிப்பு

மும்பை: கப்பல் இன்ஜின் களின் நிலையை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்காக இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளன. இந்தியன் ரெஜிஸ்டர் ஆப் ஷிப்பிங் மற்றும் நெப்டியூனஸ் நிறுவனங்களிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் நடைபெற்ற கடல்சார் வார விழாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. கப்பல் துறையில் தரவுகள் அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் குறை கண்டறிதல் ஆகியவற்றை செயல்படுத்துவது; கப்பல்களின் பராமரிப்பை வெறும் யூகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளாமல், தரவுகளின் அடிப்படையில் செய்வதும், இன்ஜின்களில் உள்ள குறைபாடுகளை தரவுகள் வாயிலாக கண்டறிவதுமே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை