உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இ.எஸ்.ஐ., வழக்குகளில் பொதுமன்னிப்பு டிச., 31 வரை நீட்டிப்பு

இ.எஸ்.ஐ., வழக்குகளில் பொதுமன்னிப்பு டிச., 31 வரை நீட்டிப்பு

புதுடில்லி: இ.எஸ்.ஐ., எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கான புதிய பொது மன்னிப்பு திட்டம், வரும் டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் ந ல அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டம், நிறுவனங்களுக்கும், இ.எஸ்.ஐ., அமைப்புக்கும் இடையே உள்ள சட்டரீதியான தகராறுகளை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்ப்பதற்கான வாய்ப்பாகும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்து, நிறுவனங்கள் சட்ட விதிகளை முறையாக பின்பற்றுவதை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், தற்காலிக மதிப்பீடுகள் தொடர்பான வழக்குகளை, செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியம் மற்றும் வட்டியை செலுத்தி தீர்த்து கொள்ளலாம். இதற்கு அபராதம் விதிக்கப்படாது. ஏற்கனவே நிலுவை தொகையை செலுத்திய நிறுவனங்கள், சர்ச்சைக்குரிய அபராத தொகையில் 10 சதவீதத்தை செலுத்தி வழக்குகளை திரும்ப பெறவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ