சர்வதேச அங்கீகாரம் பெற்றது அமுல்
புதுடில்லி: அமுல் நிறுவனத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐ.சி.ஏ., எனும் சர்வதேச கூட்டுறவு கூட்டணி வெளியிட்ட 'உலக கூட்டுறவு கண்காணிப்பு 2025' என்ற தரவரிசையில், அமுல் முதலிடம் பிடித்துள்ளது. ஐ.எப்.எப்.சி.ஓ., எனும் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. உலகளவில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் கூட்டுறவு நிறுவனங்கள் தொடர்பாக இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகளின் முன்னேற்றத்தில் அமுல் நிறுவனத்தின் பங்களிப்பை இது உணர்த்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தைப் பெற்ற, இரு நிறுவனங்களும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள தாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.