மேலும் செய்திகள்
நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே?
26-Oct-2025
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ட்ரோன் துறை மிக வேகமாக மாற்றமடைந்து உள்ளது. 2030க்குள், உலகளாவிய ட்ரோன் மையமாக உருவாகும் நோக்கத்துடன் இந்த வளர்ச்சி முன்னேறுகிறது. நில அளவு கணக்கீடு, விவசாயம், பொதுக் கூட்டங்கள், பாதுகாப்பு என பல துறைகளில் ட்ரோன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது, ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சிறகடித்த ட்ரோன் இந்த வளர்ச்சிக்கு, அரசின் கொள்கை மாற்றங்களும் முக்கிய காரணம். 2014ல் முழு தடை விதித்த நிலைமை தற்போது மாறியிருக்கிறது. 2021ல் அறிவிக்கப்பட்ட ட்ரோன் விதிமுறைகள் வாயிலாக, தொழில் முனைவோருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்த, திறந்த கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்தன. இப்போது, அதிக ட்ரோன்கள் இந்திய வானில் பறக்கத் துவங்கியுள்ள நிலையில், அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கிப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. 2025ல் வரவிருக்கும் ட்ரோன் கட்டுப்பாட்டு சட்ட வரைவு, செப்டம்பர் மாதத்தில் பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டது. இது நிறைவேறினால், 500 கிலோ கிராம் எடைக்கும் குறைவான அனைத்து வகை ட்ரோன் பயன்பாட்டிற்கும் இது முதன்மை சட்டமாக மாறும்; தற்போதுள்ள 2021ம் ஆண்டின் விதிகளை இது மாற்றும். சட்ட பாதுகாப்பு காரணம் இந்த மசோதாவின் நோக்கம், ட்ரோன் செயல்பாடுகளுக்கான சட்ட அடிப்படையை வலுப்படுத்துவது. ஆனால், தொழில் துறையினர் கூறுகையில், '2021 விதிகள், இந்திய தொழில் முனைவோர்களுக்கு சுதந்திரத்தை அளித்திருந்தாலும், 2025 வரைவு மசோதா பல கட்டுப்பாடுகள் மற்றும் சுமைகளை மீண்டும் கொண்டு வந்துவிட்டது' என்கின்றனர். ட்ரோன் வகை சான்றிதழ் கட்டாயம், ஒவ்வொரு ட்ரோனுக்கும் தனிப்பட்ட அடையாள எண், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைக்கு விதிவிலக்கு இல்லாதது, சில தவறுகளுக்கு கடுமையான குற்றவியல் தண்டனைகள் என பல அம்சங்களை புதிய வரைவு கொண்டிருப்பதால், துறை நிபுணர்கள், ஐ.ஐ.டி.,க்கள், ஐ.ஐ.எஸ்.சி., ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். இந்த மாற்றங்கள், இந்தியாவின் ட்ரோன் சக்தியில் சுயநிறைவு எனும் இலக்கை எட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, புதிய ட்ரோன் வரைவை அரசு கைவிட்டு, பழைய சட்டத்தில் திருத்தங்கள் செய்தாலே போதும் என துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். தவறான இறக்குமதி, அனுமதியின்றி பயன்பாடு ஆகியவற்றுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. நாட்டின் பணியமைப்பு, பாதுகாப்பு, விவசாயம், தொழில் என பல துறைகளை மாற்றும் திறன் கொண்டது ட்ரோன் புரட்சி. அதில், 2021 ட்ரோன் விதிகள் அந்த புரட்சிக் கனவை நிறைவேற்றுவதில் பேருதவியான து. ஆனால், 2025 வரைவு மசோதா, கட்டுப்பாடுகள் அதிகரிப்பதால் புதுமைக்கு தடையாகலாம் என்பதே இத்துறையினரின் கவலை. இந்தியாவில் ட்ரோன் பயணம் 2014 சிவில் ட்ரோன்களுக்கு முழு தடை 2018 'டிஜிட்டல் ஸ்கை' மற்றும் 'நோ பெர்மிஷன், நோ டேக் ஆப்' நடைமுறை துவங்கப்பட்டது 2020 கடுமையான விதிகள் 2021 எளிய ட்ரோன் விதிகள் அமலுக்கு வந்தன 2025 வரைவு திட்டத்தில் மாற்று கருத்துகள் முக்கிய கவலைகள்  சான்றிதழ் பெற தாமதம் கட்டுப்பாட்டு வான்பகுதியில் அனுமதி சிக்கல்  லாங்-ரேஞ்ச் ட்ரோன்களுக்கு தரநிலைகள் இல்லை  சீன ட்ரோன் சட்டவிரோத இறக்குமதி அதிகரிப்பு  போலீஸ், விமான கட்டுப்பாட்டு இயக்குநரக அமலாக்கம் பலவீனம்  இழப்பீடு சட்ட விதிகள் குழப்பம்
26-Oct-2025