மாற்று எரிபொருள் ஆய்வில் ஆட்டோ எல்பிஜியும் தேவை!
புதுடில்லி: இந்தியாவின் எரிசக்தி மாற்றம் தொடர்பான வாகன எரிபொருள் ஆய்வில், 'ஆட்டோ' எல்.பி.ஜி.,யையும் சேர்க்க வேண்டும் என, இந்தியன் ஆட்டோ எல்.பி.ஜி., கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.மத்திய அரசின் கீழ் இயங்கும் 'பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்' கார்பன் வெளியேற்றத்தை குறைக்க உதவும் எரிபொருள்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. 'டெரி' எனும் தனியார் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.