உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பு, பண்டிகை நாட்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் போதிய விலையின்றி வாழைத்தார் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு தார், 200 ரூபாய்க்கு விற்பனையானது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள சுரக்காப்பட்டி, குட்டத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் நாட்டுப்பழம், ரஸ்தாளி, செவ்வாழை தார்கள் திண்டுக்கல் சிறுமலை பழச்சந்தைக்கு எடுத்து வரப்பட்டு வியாபாரிகளிடம் ஏலம் விடப்படுகிறது. தற்போது தேவை குறைந்ததால், வாழைத்தார்கள் தேக்கமடைந்து விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரம், 700 ரூபாய்க்கு விற்ற வாழைத்தார்கள் தற்போது, 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ரூ. 700 இந்த வாரம் ரூ. 200


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி