உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அதானி பவருக்கு நிலுவை தொகை ரூ.3,264 கோடி தந்த வங்கதேசம்

அதானி பவருக்கு நிலுவை தொகை ரூ.3,264 கோடி தந்த வங்கதேசம்

அதானி பவர் நிறுவனத்துக்கு, ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மின்சார நிலுவைத் தொகையில் 3,264 கோடி ரூபாயை வங்கதேசம் வழங்கியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம் செலுத்துவதாக உறுதியளித்திருந்த 3,715 கோடி ரூபாயில், 3,264 கோடி ரூபாயை அந்நாடு சமீபத்தில் செலுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ், ஜார்க்கண்டில் உள்ள அதானி பவர் கோடா நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 100 சதவீதமின்சாரத்தை, 25 ஆண்டுகளுக்கு வங்கதேசத்திற்கு வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ