உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஐ.டி.பி.ஐ., பங்கு விற்பனைக்கு வங்கி சங்கம் எதிர்ப்பு

ஐ.டி.பி.ஐ., பங்கு விற்பனைக்கு வங்கி சங்கம் எதிர்ப்பு

புதுடில்லி:பொதுத் துறை வங்கியான ஐ.டி.பி.ஐ.,யில் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கும் முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமான ஏ.ஐ.பி.ஓ.ஏ., தெரிவித்துள்ளது. ஐ.டி.பி.ஐ., வங்கியில் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை மத்திய அரசும் எல்.ஐ.சி.,யும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய, முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத் துறையான டி.ஐ.பி.ஏ.எம்., நடவடிக்கை எடுத்து வருவதாக ஏ.ஐ.பி.ஓ.ஏ., தெரிவித்துள்ளது. இந்த பங்கு விலக்கல் நடைபெற்றால், இவ்வங்கியில் அரசின் பங்குகள் ஐம்பது சதவீதத்துக்கு கீழ் குறையும் என்பதால், ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயமாகி விடும் என்றும் தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வங்கித் துறையின் மற்ற சங்கங்களை ஒருங்கிணைத்து நேரடியாக களத்தில் இறங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி