உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு

வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:காப்பீடு, மியூச்சுவல் பண்டு விற்பனை வாயிலாக, பொதுத்துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில் 15 சதவீதம் அளவுக்கு அதிக கமிஷன் ஈட்டியுள்ளன. பொதுத்துறை வங்கிகளின் வட்டியில்லாத பிற வருவாய் அதிகரித்து வருவது நல்ல முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. எனினும், வாடிக்கையாளருக்கு பொருந்தாத காப்பீடு திட்டங்கள், மியூச்சுவல் பண்டு திட்டங்களை விற்பனை செய்வதாக பொதுத்துறை வங்கிகளின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி கவர்னரும் வங்கி உயர் அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.

2024 - 25 கமிஷன் நிலவரம்

வங்கிகள் காப்பீடு மியூச்சுவல் பண்டுஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 36 -இந்தியன் பேங்க் 181 -கனரா பேங்க் 557 -பேங்க் ஆப் மகாராஷ்டிரா 51 0.06பேங்க் ஆப் இந்தியா 273 8யூகோ பேங்க் 62 2எஸ்.பி.ஐ., 2,767 1,783பஞ்சாப் நேஷனல் பேங்க் 480 11பேங்க் ஆப் பரோடா 356 143மொத்தம் 4,763 1,947ரூ. கோடியில்

நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளில், ஒன்பது முக்கிய வங்கிகள் கமிஷனாக திரட்டிய தொகை

2023 - 24: 5,808 கோடி ரூபாய் 2024-25: 6,710 கோடி ரூபாய் 15 சதவீதம் உயர்வு. காப்பீடு திட்ட கமிஷன்2023 - 24: 4,469 கோடி ரூபாய் 2024-25 4,763 கோடி ரூபாய். மியூச்சுவல் பண்டு கமிஷன்2023 - 24: 1,339 கோடி ரூபாய்2024-25: 1,947 கோடி ரூபாய் காப்பீடுகளைப் பொறுத்தவரை ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடுகள் இரண்டும் அடங்கும். இவை தவிர மத்திய அரசின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ