உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வங்கிகளின் கடன் வளர்ச்சி சரிவு

வங்கிகளின் கடன் வளர்ச்சி சரிவு

மும்பை:வணிக வங்கிகளுக்கான கடன் வளர்ச்சி முந்தைய ஆண்டைக் காட்டிலும், கடந்த ஏப்ரல் 4 முதல் 15ம் தேதி வரையிலான 15 நாட்களில், 10.30 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில், டிபாசிட் வளர்ச்சி 10.20 சதவீதமாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில், கடன்கள் 2.14 லட்சம் கோடி ரூபாயாகவும், டிபாசிட் 2.54 லட்சம் கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளன. ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய 15 நாட்களில் கடன் வளர்ச்சி 11 சதவீதமாகவும், டிபாசிட் வளர்ச்சி 10.10 சதவீதமாகவும் இருந்ததாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !