உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாரத் எலக்ட்ரானிக்ஸ் ரூ.585 கோடிக்கு ஆர்டர்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் ரூ.585 கோடிக்கு ஆர்டர்

பெங்களூரு:பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்த மாதம் 585 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. நெருப்பு கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத்தொடர்பு அமைப்பு, ஜாமர்கள், இதர உதிரிபாகங்கள், சேவைகள் உள்ளிட்டவற்றுக்கான ஆர்டர்கள் இது.நடப்பாண்டில் இதுவரை 3,445 கோடி ரூபாய்க்கும்; கடந்த நிதியாண்டில் 18,715 கோடி ரூபாய்க்கும் ஆர்டர் பெற்றுள்ளது. ராணுவம் அல்லாதவற்றுக்கான உற்பத்திகளை அதிகப்படுத்தி, இந்நிறுவனம் வணிகத்தை பெருக்கி வருகிறது. இணைய பாதுகாப்பு தீர்வுகள், மென்பொருள், ரயில் மற்றும் மெட்ரோ தீர்வுகள், விண்வெளி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகளையும் உற்பத்தி செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி