உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக தரநிலைகள் தினம் விருது வழங்கிய பி.ஐ.எஸ்.,

உலக தரநிலைகள் தினம் விருது வழங்கிய பி.ஐ.எஸ்.,

சென்னை:உலக தர நிலைகள் தினத்தையொட்டி, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணயம் அமைப்பு சார்பில், 'மானக் மகோத்சவ் 2025' நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில், நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழில் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தொழில்முறை நிபுணர்கள் பங்கேற்றனர். நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பதில், தர நிலைகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. பி.ஐ.எஸ்., சென்னை அலுவலகத் தலைவர் தயானந்த் பேசுகையில், ''பி.ஐ.எஸ்., சார்பில், தரநிலைகள் மற்றும் நுகர்வோர் பாதுாப்பை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சிகள் தரநிலைகள் மற்றும் சமூகங்களை இணைக்கின்றன. ''புதுமை, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவை ஒருங்கிணைந்து வளர வழிவகுக்கின்றன,'' என்றார். நிகழ்ச்சியில், தர நிலைகள் மற்றும் தர கலாசாரத்தை ஊக்குவிப்பதில் சிறப்பாக பங்களித்த தனிநபர்கள், நிறுவனங்கள், தொழில், கல்வி மற்றும் ஊடகத் துறை பிரதிநிதிகள் ஆகியோருக்கு, 'மானக் வீர விருது' வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை