வர்த்தக துளிகள்...
முக்கிய துறைகளில் 'சிசிடிவி' கட்டுப்பாடு பாதுகாப்பு தொடர்பான முக்கிய துறைகளில் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பான உதிரிபாக வினியோகத்தை உறுதி செய்ய, இந்திய சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Gallery சிறு அலுமினிய நிறுவனங்களுக்கு பாதிப்பு அலுமினிய மூலப்பொருளின் விலை, இறக்குமதி விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுவதால், சிறு நிறுவனங்களின் உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது. இதனால் அவற்றின் லாபமும், பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் திறனும் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. விமான தயாரிப்பில் மஹிந்திரா விமானங்கள் மற்றும் பாதுகாப்பு துறை சாதனங்களை தயாரிக்க, 'நோவாவாயு ஏரோஸ்பேஸ்' என்ற புதிய துணை நிறுவனத்தை மஹிந்திரா குழுமம் தொடங்கியுள்ளது. இதன் வாயிலாக, விமான மற்றும் பாதுகாப்பு துறையில் தனது தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.