UPDATED : நவ 26, 2026 12:00 AM | ADDED : நவ 25, 2026 11:00 PM
வர்த்தக துளிகள் பிளிப்கார்ட் சி.இ.ஓ., கல்யாண் கிருஷ்ணமூர்த்தி விலகல் வால்மார்ட் நிறுவனத் துக்குச் சொந்தமான பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, 11 ஆண்டுகளுக்குப் பின் அப்பதவியிலிருந்து விலகுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இடைக்காலத் தலைவராக த லைமை தொழில்நுட் ப அதிகாரியான பாலாஜி தியாகராஜன் செயல்படுவார். ‘மக்காச்சோள இருப்புக்கு வரம்பு விதிக்க வேண்டும்’ கோழி தீவன தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம், சோயாவுக்கு இருப்பு வரம்பை விதிக்காவிட்டால், கோழி இறைச்சி விலை கிலோவுக்கு 40 – 50 ரூபாயும், முட்டை விலை 3 – 4 ரூபாயும் அதிகரிக்கும் என, அனைத்திந்திய கறிக்கோழி வளர்ப்பாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. கோழித்தீவன விலை டன்னுக்கு 15,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை தடுக்க மாநிலங்களிடம் உள்ள 30 லட்சம் டன் மக்காச்சோளத்தை சலுகை விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும், செயற்கை பற்றாக்குறை, பதுக்கலை தடுக்க வேண்டும் என்றும் அ வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு எதிராக திவால் மனு பாக்ஸ்கான் நிறுவனத்தின் பெங்களூரு ஆலை ஊழியர்களுக்கு தங்குமிட சேவை வழங்கிய ‘பி.சி.டி., எம்பிராசா’ நிறுவனம், 143 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வசூலிக்க சென்னை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் திவால் மனு தாக்கல் செய்துள்ளது. சர்க்கரை இறக்குமதி சலுகை நீட்டிப்பு வரியில்லா சர்க்கரை இறக்குமதிக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரி விகித ஒதுக்கீட்டின் அடிப்ப டையில் இறக்குமதி செய்வதற்கான அனுமதி, கடந்த ஆக., 20ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, இறக்குமதி எண் 170114 கொண்ட சர்க்கரையை வரியில்லாமல் டிச., 31ம் தேதி வரை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த கெடு, 2027 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு 8,600 டன் சர்க்கரை ஏற்றுமதி வரி விகித ஒதுக்கீட்டின் கீழ் 8,606 டன் சர்க்கரையை வரியில்லாமல் அல்லது குறைந்த வரியில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. ‘ஜியோஸ்டார்’ நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை டிவி சந்தா தாரர்கள் குறைவு மற்றும் விளம்பர வருவாய் மந்தம் காரணமாக, ‘ஜியோஸ்டார்’ நிறுவனம், தனது அடுத் தகட்ட ஆட்குறைப்பை தொடங்கியுள்ளது. இதன் வாயிலாக, 150க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் பணிநீக்கம் செய்யப் பட உள்ளதாக கூறப்படுகிறது.