உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

எம்.எஸ்.எம்.இ., கடன் தொகை உயர்த்த எஸ்.பி.ஐ., திட்டம் பாரத ஸ்டேட் வங்கி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும், ‘எம்.எஸ்.எம்.இ., ட்ரீம்’ திட்டத்தின் கீழ், 2027 மார்ச் மாதத்திற்குள், கடன் வழங்கலை 50 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2023 டிசம்பரில் அறிமுகமான இத்திட்டத்தில், தற்போது 5 கோ டி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆசிய மேம்பாட்டு வங்கி ரூ.630 கோடி கடன் இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்கலை விரிவுபடுத்த, ஆசிய மேம்பாட்டு வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, ‘வெரிடாஸ் பைனான்ஸ்’ நிறுவனத்துடன் 630 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், குறைந்தபட்சம் 30 சதவீத கடன் தொகை, பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும். ஆள் குறைப்பில் ‘இன்ஸ்டாமார்ட்’ உணவு மற்றும் மளிகை பொருட்கள் வினியோக நிறுவனமான ஸ்விக்கி, தனது விரைவு வர்த்தக பிரிவான இன்ஸ்டாமார்ட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 340 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் பணிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை என அறிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் மேக் நிறுவனம் குஜராத்தில் 600 டன் காந்த உற்பத்தி மத்திய அரசின் அரிய வகை காந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், ஹிந்துஸ்தான் மேக் நிறுவனம், புரோஸீல் கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தில் 600 டன் நிரந்தர காந்த உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. இது உள்நாட்டு காந்த உற்பத்தி திறன் அதிகரிக்க வழிவகுக்கும் என ஹிந்துஸ்தான் மேக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி ராஜினாமா உணவு பொருட்கள், பேக்கரி உணவு வகைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ‘பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி புனீத் தாஸ், பதவியேற்று 10 மாதங்களுக்குள் ராஜினாமா செய்துள்ளார். வேறு நிறுவனத்தில் புதிய வாய்ப்பை ஏற்க உள்ளதால், அவர் பதவி விலகுவதாக, பங்கு சந்தைக்கு நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான சேவை தொடங்க அனுமதி கேட்கிறது அதானி குழுமம் உள்நாட்டு விமான பயணத்திற்கான தேவை அதிகரிப்பதால், விமான சேவை துறையில் முதலீடு செய்ய அனுமதிக்குமாறு, மத்திய அரசிடம் அதானி குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. ‘விமான சேவை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், குறைந்தபட்சம் முதலீடு செய்யவாவது அனு ம தி வழங்குமாறு அரசிடம் கோரியுள்ளோம். முதலீட்டு நிதி அமைப்புகள், பிற விமான நிறுவனங்கள் அல்லது இத்துறையில் நுழைய விரும்பும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் முதலீடு செய்ய விரும்புகிறோம்’ என, குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் ராபி சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ