மிட்டாயா, மாத்திரையா? ஹாஜ்மோலாவுக்கு நோட்டீஸ்
செரிமான சிக்கலுக்குப் பயன்படுத்தும் ஹாஜ்மோலா, மிட்டாயா, மாத்திரையா என விளக்கம் கேட்டு, டாபர் நிறுவனத்துக்கு மத்திய ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நுகர்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டாபர் நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீசில், ஹாஜ்மோலா, 18 சதவீத வரியின் கீழ் வரும் மிட்டாயா அல்லது, 12 சதவீத வரி விதிப்பில் வரும் ஆயுர்வேத தயாரிப்பா, எதன் கீழ் வரும் என சந்தேகத்தை நிவர்த்தி செய்யுமாறு ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதற்கு, டாபர் நிறுவனம், ஹாஜ்மோலா ஆயுர்வேத தயாரிப்பு என்பதால், 12 சதவீதம் வரி விதிப்பின் கீழ் வருவதாக, முந்தைய வழக்குகளின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குநரகத்துக்கு அனுப்பிய பதிலில் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., நடைமுறை, நிறுவனங்களை குழப்பும் வகையில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன.
முந்தைய குழப்பங்கள் :
*நறுமண பால் -என்பது குளிர்பானமா அல்லது பால் பொருட்கள் தயாரிப்பா? *மசாலா கலவை என்பது- சுவையூட்டியா அல்லது மசாலாவா?*ரெடிமேட் பரோட்டா என்பது- உணவா அல்லது ரொட்டியா?