சிமென்ட், ஸ்டீல் உற்பத்தி அதிகம் மின்சாரம், உரம் தயாரிப்பு குறைவு ஏப்ரல், மே மாத புள்ளிவிபரம்
புதுடில்லி: கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சிமென்ட், ஸ்டீல் உற்பத்தி அதிகரித்துள்ளது; உரம் மற்றும் மின்சார உற்பத்தி குறைந்தது என்று மத்திய புள்ளி விபர அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.உள்கட்டமைப்பைச் சேர்ந்த 10 துறைகளில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சிமென்ட் உற்பத்தி 8 சதவீதத்துக்கும் அதிகமாகவும்; ஸ்டீல் உற்பத்தி 6.70 சதவீதத்துக்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது.
நிலக்கரி உற்பத்தியும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 107 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், இக்காலகட்டத்தில் மின்சார மற்றும் உர உற்பத்தி குறைந்துள்ளது. அனல்மின் நிலைய உற்பத்தி 7 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருந்தது. மின் உற்பத்தியில் ஒட்டுமொத்த பங்கில் மூன்றில் இரு பங்கு, அனல்மின் நிலைய உற்பத்தியாக இருப்பதால், மொத்த மின் உற்பத்தி 1.60 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.https://x.com/dinamalarweb/status/1946396998422454766அனல்மின் நிலைய உற்பத்தி 7 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருந்தது. மின் உற்பத்தியில் ஒட்டுமொத்த பங்கில் மூன்றில் இரு பங்கு, அனல்மின் நிலைய உற்பத்தியாக இருப்பதால், மொத்த மின் உற்பத்தி 1.60 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.உரங்கள் உற்பத்தியும் இரண்டு மாதங்களில் சரிவைக் கண்டுள்ளது. ஏனெனில், மூன்று வித உரங்களில் நைட்ரஜன் மற்றும் யூரியா உற்பத்தி சரிவு கண்டன. பாஸ்பேட் உற்பத்தி வளர்ச்சி கண்டிருந்தாலும், மற்ற இரு உரங்களைக் காட்டிலும் இது குறைவான பங்கை கொண்டுள்ளதன் காரணமாக, ஒட்டுமொத்த உற்பத்தி 10 சதவீதத்துக்கும் மேலாக குறைந்திருந்தது.