உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில் முனைவோருக்கு சாட் ஜி.பி.டி., பயிற்சி

தொழில் முனைவோருக்கு சாட் ஜி.பி.டி., பயிற்சி

சென்னை:தொழில் முனைவோருக்காக, சாட் ஜி.பி.டி., குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது' என, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்த செய்தி குறிப்பு:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தொழில்முனைவோருக்கான ஒருநாள் சாட் ஜி.பி.டி., பயிற்சி வகுப்பு, வரும் டிச., 20ம் தேதி நடைபெற உள்ளது.தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் ஆகியோருக்கு, 'சாட் ஜி.பி.டி.,' குறித்த தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை வழங்க உள்ளோம். வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தல், திறன் மேம்படுத்தல், செலவுகளை குறைத்தல் போன்றவற்றுக்கு இப்பயிற்சி உதவும்.இதில் பங்கேற்பவர்களுக்கு, அரசு சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சி பற்றிய கூடுதல் விபரங்களை, www.editn.inஎன்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு, 90806 09808, 96771 52265 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சி நடைபெறும் இடம், இ.டி.ஐ.ஐ., - ஐ.டி., வளாகம், சென்னை-600 032.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை