உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  செஸ் சீர்திருத்தங்கள் நாளை ஆலோசனை

 செஸ் சீர்திருத்தங்கள் நாளை ஆலோசனை

புதுடில்லி: 'செஸ்' எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் ஏற்றுமதி ஊக்க திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்க, இதில் தொடர்புடையவர்களின் கூட்டத்தை வர்த்தக அமைச்சகம் நாளை (ஜூன் 30) நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில், உள்நாட்டு சுங்கப் பகுதிகளுக்கு சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்த அனுமதி, சுதந்திர வர்த்தக கிடங்கு மண்டலங்களில் சீர்திருத்தம் மற்றும் தொழில் செய்வதை எளிதாக்கும் கூடுதல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. செஸ் கொள்கையில் விரிவான சீர்திருத்தங்களை பரி ந்துரைக்க, 17 உறுப்பினர்களை கொண்ட குழுவை மத்திய அரசு ஏற்கனவே அ மைத்துள்ளது. மேலும், செஸ் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், கிடங்கு உற்பத்தி மற்றும் பிற செயல்பாடுகள், முன்கூட்டியே அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி ஊக்க திட்டங்களை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் குழு, 'செஸ் 2.0'கொள்கைக்கான விரிவான சீர்திருத்த செயல்திட்டத்தை உள்ளடக்கிய வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. 2005-ம் ஆண்டு செஸ் சட்டம் உருவாக்கப்பட்டபோது இருந்த வர்த்தக சூழல் தற்போது மாறியிருப்பதால், உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப புதிய சீர்திருத்தங்கள் அவசியமாகியு ள்ள சூழலில், இந்த ஆலோசனை கூட்டம் கூட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை