உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரிய வகை காந்தங்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமம்

அரிய வகை காந்தங்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமம்

புதுடில்லி:சீனாவில் இருந்து அரிய வகை காந்தம் இறக்குமதியில் கட்டுப்பாடு தளரும் வகையில், நான்கு இந்திய நிறுவனங்களுக்கு இறக்குமதி உரிமம் கிடைத்து உள்ளது. டி.இ.டயமண்டு, கான்டினென்டல் இந்தியா, ஹிட்டாச்சி உள்ளிட்ட நான்கு இந்திய நிறுவனங்கள், நிபந்தனைகளின் அடிப்படையில், அரிய வகை காந்தம் இறக்குமதி உரிமத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. அரிய வகை காந்தங்கள், தாது பொருட்கள் ஏற்றுமதிக்கு சீனா, கடந்த ஆண்டு ஏப்ரலில் தடை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், அவற்றை அதிக அளவில் பயன்படுத்தும், மின்சார வாகன நிறுவனங்கள், மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உலகம் முழுதும் பாதிக்கப்பட்டன. முற்றிலும் தடை விதிக்கப்படா விட்டாலும், சீனா விதித்த கடும் நிபந்தனைகளால், மின்சார மோட்டார்கள், பிரேக்கிங் அமைப்புகள், வாகன ஸ்டியரிங் இயக்கம் ஆகியவற்றில் முக்கிய பாகமாக பயன்படும், நியோடைமியம் - அயன் - பரோன் காந்தங்களை கொள்முதல் செய்வதில் இந்திய தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால், அரிய வகை காந்த இருப்பு குறைந்து, பற்றாக்குறை ஏற்படுவதுடன் கடுமையான விலை உயர்வு மற்றும் தயாரிப்பு தாமதம் ஆகியவை உள்நாட்டு சந்தையை பாதிக்கும் என மின்வாகன தயாரிப்பாளர்கள் கூறி வந் தனர். இதையடுத்து, சீனாவின் சிக்கலான நிபந்தனைகளை எதிர்கொண்டு இறக்குமதி ஒப்புதல் பெறுவதை ஒழுங்குபடுத்த, வாகன துறையினருடன் மத்திய அரசு ஆலோசனைகளை துவங்கியது. ராணுவ தளவாடங்களில் இவை பயன்படுத்தப்படாது என்பதற்கான பலகட்ட உறுதியேற்புகளை சீன வினியோகஸ்தர்கள் வலியுறுத்தும் நிலையில், இறக்குமதி நிறுவனங்கள் அவற்றை அரசிடம் இருந்து பெற்று அளிக்க வேண்டியுள்ளது. சீன துாதரகம் மற்றும் அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குனரகத்தின் ஒப்புதலும் பெறப்பட வேண்டிய நிலை உள்ளது. அமெரிக்க வரி விதிப்புக்கு பதிலடியாக சீனா எடுத்த நடவடிக்கைகளில், அரிய வகை காந்தம், தாது பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் உலக அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இவற்றின் இறக்குமதிக்கு சீனாவை மட்டுமே நம்பாமல், வேறு வழிகளை மத்திய அரசு ஆராய்ந்தாலும், இந்திய நிறுவனங்கள் சீன இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளன. ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஜப்பானும் முன்னிலை வகித்த இந்த துறையில், தற்போது சீனாவே ஆதிக்கம் செலுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில் சீனாவின் ஏகபோகத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய சர்வதேச வாகன துறை விரும்பும் நிலையில், தற்போது நான்கு இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ள இறக்குமதி உரிமம், அரிய வகை காந்தம் வினியோகம் சீராகும் என்ற நம்பிக்கையை நிறுவனங்களிடம் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரி விதிப்புக்கு பதிலடியாக சீனா எடுத்த நடவடிக்கைகளில், அரிய வகை காந்தம் ஏற்றுமதி கட்டுப்பாடு ராணுவ தளவாடங்களில் பயன்படுத்தப்படாது என்பதற்கான பலகட்ட உறுதியேற்புகளை கேட்கும் சீன வினியோகஸ்தர்கள் சீன துாதரகம் மற்றும் அன்னிய வர்த்தகத்துக்கான பொது இயக்குனரகத்தின் ஒப்புதலும் பெறப்பட வேண்டிய நிலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ